Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திடீரென மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (19:14 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 4,496 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 4,496 பேர்களில் 1,291 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை
80,942 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 2000ஐ குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 68 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2167 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 5,000 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 102,310  என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் இன்று 39,715 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments