ஒரே நாளில் 3,926 பேர் மீது வழக்குப்பதிவு - சென்னையில் போலீஸ் அதிரடி!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (10:26 IST)
சென்னையில் நேற்று மட்டும் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 3,926 பேர் மீது வழக்குப்பதிவு. 

 
தலைநகரமான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வரும் நிலையில் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் ஹெல்மெட் அணிவது உள்ளிட்ட போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
 
இந்நிலையில் சென்னையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம் என கூறப்பட்டு இந்த புதிய விதி இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. 
 
இதனிடையே நேற்று சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 3,926 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து வந்ததாக 2,023 பேர் மீதும் என மொத்தமாக 3,926 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments