Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வழக்கில் 29-ல் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்! ராஜேஷ் தாஸ்-க்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

Senthil Velan
புதன், 24 ஜனவரி 2024 (11:49 IST)
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வரும் 29 ஆம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதம் 16ம் தேதி தீர்ப்பளித்தது. 
 
இதனிடையே விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கில் போதுமான முகாந்திரம் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ALSO READ: ஆம்னி பேருந்துகளுக்கு இன்றே கடைசி நாள்..! அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை..!!
 
இந்நிலையில் மூன்றாண்டு சிறை தண்டனை எதிர்த்து ராஜேஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது விழுப்புரம் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. வருகிற 29ஆம் தேதி ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார். இதுவே அவருக்கு கடைசி வாய்ப்பு என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்