Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி... 27 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (08:15 IST)
கனமழை காரணமாக இன்று தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

 
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. 
 
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் இன்று தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி கள்ளக்குறிச்சி, கரூர், வேலூர் , நாமக்கல், ராணிப்பேட்டை, தேனி, விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், விருதுநகர், அரியலூர், மதுரை, ராமநாதபுரம், பெரம்பலூர், சிவகங்கை, திருச்சி, கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை. 
 
மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்டுகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்துக்கு முதல்வர், துணை முதல்வர், கனிமொழி வாழ்த்து..!

33 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. சிங்கள ராணுவம் அராஜகம்..!

அஜித், ஷோபனா, பாலையா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments