Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வணிகர்கள் உயிரிழப்பு… முதல்வர் பழனிசாமி இரங்கல்! ரூ.20 லட்சம் நிதி உதவி

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (17:14 IST)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தன் குளம் அரசடி தெருவில் வசித்து வந்தவர் பென்னீக்ஸ்,. இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார்.இவர் கொரொனா காலத்தில் வணிக மையங்கள் இயங்கும் நேரத்தை மீறுவதாக புகார்கள் எழுந்து வந்தன.

கடந்த 19 ஆம் தேதி அன்று கடைகளை குறித்த நேரத்தில் அடைப்பது தொடர்பாக காவல்துறைக்கும் , பென்னீக்ஸுக்கும் தகராறு எழுந்ததாகத் தெரிகிறது.அதனால் பென்னீக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மகன்` கைது சம்பவத்தை தட்டிக்கேட்ட அவரது தந்தை ஜெயராஜை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து, தந்தை,மகன் இருவரையும் கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் நேற்று முன் தினம் நெஞ்சிவலிப்பதாக கூறிய பென்னீக்ஸ் கீழே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

பென்னீக்ஸ் இறந்தை அடுத்து, அவரது சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது தந்தை ஜெயராஜ் நெஞ்சி வலிகாரணமாக மருத்துவமனைவில் அடைக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

இந்நிலையில், ஒரே சிறையில் மகனும் தந்தையும் 10 மணிநேர இடைவெளியில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் சாத்தான்குளத்தில் 2 வணிகர்கள் மரணமடைந்ததை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று  கடையடைப்பு என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்தார்.

இந்நிலையில்,  மதுரை உயர் நீதிமன்றம்  டிஜிபி நேரில் ஆஜராகவேண்டும் என கூறியிருந்தது.

இதற்கிடையே, தூத்துக்குடி சாத்தான்குளத்தில் உள்ள சக வணிகர்கள் போலீஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதில், இலவசமாக செல்போன் கேட்ட போலீஸாருக்கு அதைத் தர மறுத்த பென்னிக்ஸ் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறியுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி 2 வணிகர்கள் உயிரிழப்பிற்கு இரங்கள் தெரிவித்து, அவர்கள் குடும்பத்திற்கு தலாரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாகவும்,  இந்த சம்பவம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments