Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த 2 குருக்கள் இடைநீக்கம்

Advertiesment
அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த 2 குருக்கள் இடைநீக்கம்
, திங்கள், 5 பிப்ரவரி 2018 (12:43 IST)
நாகை மாவட்டத்தில் விதிகளை மீறி அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த 2 குருக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
காசிக்கு சமமாகக் கருதப்படும் சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை, அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் ஒன்றாகும். 
 
இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மன் சன்னதியில் அம்பாளுக்கு சுடிதார் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கண்டனங்களுக்கு ஆளானது. இந்த செயலில் ஈடுபட்ட குருக்களான ராஜ், கல்யாணம் ஆகிய இருவரை  திருவாவடுதுறை ஆதீனம் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிப்ரவரி 21ம் தேதி மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - கமல்ஹாசன் அதிரடி