கவுதம் கார்த்திக் செல்போன் பறிப்பு: மைனர் சிறுவன் கைது!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (09:51 IST)
தமிழ் சினிமா நடிகர் கவுதம் கார்த்திக் சைக்கிளில் சென்றபோது அவரிடமிருந்த செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
தமிழ் சினிமா நடிகர் கார்த்திக்கின் மகனும், இளம் தமிழ் நடிகர்களில் முக்கியமானவருமாக இருப்பவர் கௌதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கத்தில் கடல் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த 2 ஆம் தேதி காலை வழக்கம்போல தனது வீட்டிற்கு அருகே உள்ள டிடிகே சாலையில் உடற்பயிற்சிக்காக சைக்கிளிங் சென்றார். 
 
அப்போது அவரை வழிமறித்த இரண்டு பேர் அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை திருடிக் கொண்டு சென்றனர். இதுகுறித்து உடனடியாக அவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 
 
இந்நிலையில் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மைலாப்பூர் குயில் தோட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், பெரும்பாக்கத்தை சேர்ந்த சரத் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments