Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் ரூ.2.25 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை அதிரடி!

விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் ரூ.2.25 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை அதிரடி!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (12:09 IST)
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு என அதிரடியாக சோதனையை நடத்தி வருகிறது வருமான வரித்துறை அதிகாரிகள்.


 
 
இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பல ஆவணங்கள் மறைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
 
திருவல்லிக்கேனியில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் நைனார் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 2.25 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பணம் எதற்காக கொண்டு வரப்பட்டது, எங்கிருந்து கொண்டு வரப்பட்டது போன்ற விசாரனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிச்சடங்கு செய்த மறுநாள் உயிரோடு வீட்டுக்கு வந்த நபர்.. குஜராத்தில் ஒரு அதிசய சம்பவம்..!

ஆன்லைன் வகுப்பு தான்.. 5ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்ல வேண்டாம்: முதல்வர் உத்தரவு..!

பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி: ஜி20 மாநாட்டில் பங்கேற்பு..!

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments