Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..வானிலை ஆய்வு மையம்

Siva
திங்கள், 26 பிப்ரவரி 2024 (08:50 IST)
தமிழகத்தில் கோடை காலம் கிட்டத்தட்ட ஆரம்பித்துவிட்ட நிலையில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இருப்பினும் அதிகாலை நேரத்தில் பனி பொழிந்து வருகிறது என்றும் அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்ன சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

மேலும் கோடை காலம் நெருங்கி வருவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments