Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டில் பிணமாகக் கிடந்த சிறுவன் – இதுதான் காரணமா ?

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (09:20 IST)
விழுப்புரம் அருகே காட்டுக்கு நடுவே 15 சிறுவன் ஒருவன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஐயன்குஞ்சரம் பகுதியைச் சேர்ந்த கேசவன். இவர் வேலைக் காரணமாக வெளிநாட்டில் உள்ளார். இவருக்கு பராசக்தி என்ற மனைவியும் சிவகுமார் என்ற 15 வயது மகனும் உள்ளனர்.  மனைவி மற்றும் மகன் இருவரும் ஐயன்குஞ்சரம் பகுதியில் வசித்து வருகின்றனர். சிவக்குமார் அங்கு உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்புப் படிக்கிறார்.

வழக்கம்போல நேற்று முன் தினம் காட்டுக்கு விளையாடச் சென்ற சிவகுமார் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் பதற்றமடைந்த தாய் பராசக்தி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் ஊர் முழுவதும் தேட ஆரம்பித்துள்ளார். வெகுநேரத்துக்குப் பிறகு நடுக்காட்டில் அவரது உடல் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். இதனைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

அவரது பிணத்தைச் சுற்றி நிறைய ஆணுறைகள் கிடந்துள்ளது. இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் அப்பகுதியில் ஆண்கள் பெண்களைக் கூட்டி வந்து பாலியல் உறவுக் கொள்வது வாடிக்கை என்றும் அதைப் பார்த்துவிட்ட சிறுவனை யாராவது இப்படிக் கொன்றிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். இதையடுத்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிக்கக் கூட தண்ணி கிடைக்காது! அடி மடியில் கைவைத்த மோடி! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

இனி பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கத்தை பார்க்க முடியாது: முடக்கியது மத்திய அரசு..!

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! - காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி! தீவிரவாதிகள் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு! - காஷ்மீரில் பரபரப்பு!

மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

அடுத்த கட்டுரையில்