Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புல்வாமா தாக்குதலன்று எடுக்கப்பட்டதா மோடியின் மேன் vs வைல்டு ?- கிளம்பியது புது சர்ச்சை !

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (09:02 IST)
மோடி கலந்துகொண்டுள்ள சாகச நிகழ்ச்சியான மேன் vs வைல்டு ஆகஸ்டு 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

பேர் கிரில்ஸ் உலகம் முழுவதும் பிரபலமான காடுகளுக்குள் சாகசப்பயணம் மேற்கொள்ளும் சாகசக் காரர். இவரின் சாகசப்யணங்களாக மேன் vs வைல்டு நிகழ்ச்சிகள் உலக அளவில் பிரசித்தம். இவர் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் மோடியுடன் செய்த சாகசப்பயண நிகழ்ச்சியின் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவருடன் பிரதமர் மோடி காடுகளுக்குள் மேற்கொண்ட சாகசப் பயண நிகழ்ச்சிக்கான முன்னோட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும் ‘180 நாடுகளில் உள்ள மக்கள் நமது பிரதமர் மோடியின் மற்றொரு முகத்தைப் பார்ப்பார்கள். விலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மோடி இந்திய வனப்பகுதிக்குச் செல்கிறார். வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி டிஸ்கவரியில் ஒளிபரப்பாக உள்ளது ’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது சமூகவலைதளங்களில் வைரலாக கூடவே சர்ச்சைகளும் சேர்ந்துகொள்ள ஆரம்பித்தன. இந்த நிகழ்ச்சி புல்வாமா தாக்குதல் நடந்த அன்று படம்பிடிக்கப்பட்டது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது தனது ட்விட்டர் பக்கத்தில் ’44 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த அன்று பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார். தாக்குதல் பற்றி அவருக்குத் தகவல் தெரிவித்த பின்னரும் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ’ எனக் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

+8, +85, +65 தொடங்கும் எண்களில் இருந்து அழைப்பு வருகிறதா? மத்திய அரசு எச்சரிக்கை

வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! இனி மழை எப்படி இருக்கும்? - இந்திய வானிலை ஆய்வு மையம்!

அமெரிக்காவின் தேசியப்பறவை கழுகு: அதிகாரபூா்வமாக அறிவித்த ஜோ பைடன்.. டிரம்ப் மாற்றுவாரா?

நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் எப்படி?

ஆப்கானிஸ்தான் மீது குண்டுமழை பொழிந்த பாகிஸ்தான்! போர் உருவாகும் சூழல்?

அடுத்த கட்டுரையில்
Show comments