கடந்த சில நாட்களாக 12ஆம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி முற்றிலும் முடிவடைந்து விட்டதாக தேர்வு துறை தெரிவித்துள்ளது.
12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தமிழக முழுவதிலும் 79 மையங்களில் நடந்து வந்த நிலையில் முப்பதாயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகள் தற்போது முடிவடைந்து விட்டதாகவும் அடுத்த கட்டமாக மதிப்பெண்களை துவக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த பணி முடிந்து விடும் என்றும் தேர்வுத்துறை துறவித்துள்ளது.
எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி மே எட்டாம் தேதி காலை 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அதில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது 11-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் அந்த பணியும் நாளை முடிவடைந்து விடும் என்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என்றும் தேர்வுத்துறை கூறியுள்ளது.