Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த பள்ளி தாளாளர்: 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (11:56 IST)
பாலியல் தொல்லை கொடுத்ததால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 2-வது செக்டர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு மகேஸ்வரி தம்பதி. இவர்களது மகள் மணிமாலா(வயது 15). 10ம் வகுப்பு தேர்வு எழுதிவரும் இவர் நேற்று முந்தினம்  திடீரென மண்ணெண்னை ஊற்றி தீ  வைத்துக்கொண்டார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டும்  கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி மணிமாலா உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸார் மாணவி வீட்டில் விசாரணை நடத்தினர். அப்போது மணிமாலா எழுதிவைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தனது மரணத்திற்கு சரவணன்தான் காரணம் என்று எழுதிவைத்திருந்தார். மாணவி குறிப்பிட்டிருந்த சரவணன் என்பவர் பழனிவேலுவின் தங்கை கணவர். விருகம்பாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் விசாரணையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மணிமாலாவை சந்திக்க வந்த சரவணன் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்தார். மேலும் அதனை செல்போனில் படம் பிடித்தார். இதைத்தொடர்ந்து செல்போனில் படம்பிடித்த காட்சிகளை காட்டி, வெளியே சொன்னால் புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்றும் மாணவியை மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் மணிமாலாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மணிமாலாவை பரிசோதித்த மருத்துவர், மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார். தனது தங்கையின் கணவரை எப்படி புகார் கொடுப்பது என்ற வேதனையில் பழனிவேல் இருந்துள்ளார். இந்த சூழ் நிலையில் மாணவி திடீரென தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சரவணனை போலீஸார் கைது செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்