Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 102 டிகிரி வெயில்.. 14 இடங்களில் சதம்..! – வெப்ப அலையில் அவதியுறும் மக்கள்!

Prasanth Karthick
வியாழன், 4 ஏப்ரல் 2024 (11:24 IST)
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இன்று பல பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது.



மார்ச் இறுதி முதலாக கோடை வெப்பம் அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பம் வாட்டி வருகிறது. ஏப்ரல் தொடக்கமே இப்படி என்றால் மே மாதம் எல்லாம் என்ன ஆகும் என மக்கள் அயற்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று தமிழ்நாட்டின் 14 பகுதிகளில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி வெயிலும், சென்னையில் 102 டிகிரி வெயிலும் வாட்டி வருகிறது.

ALSO READ: ”என்னை லவ் பண்ணலைனா..” லாரி டிரைவரின் லவ் டார்ச்சர்! பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வளிமண்டல கீழடுக்கு காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 7ம் தேதி வரை பெருவாரியான பகுதிகளில் வறண்ட வானிலையும், ஏப்ரல் 8,9ல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசு எடுக்கும் முடிவை பின்பற்றுவோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு..

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரி கிடையாதா?

இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லுமா?

நேற்றைய திடீர் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்தது பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கைக்கு மாறியது ஏன்? இதுதான் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments