Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (18:04 IST)
பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோன ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில் இன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய முக ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் ஆலோசனை கூட்டத்தின் முடிவில் சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 
 
அதில் முக்கியமாக பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களிலும் 100 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
துணிக்கடைகள், நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் 100 சதவீத வாடிக்கையாளர்களுடன்  செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து உள் அரங்குகளில் கருத்தரங்கு, இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments