தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 19ம் தேதி சனிக்கிழமையன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியான நிலையில் அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் தேதி அன்று கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் ஆதார் அட்டை, அஞ்சலக கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான்காடு, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.