Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை – எங்கெங்கு தெரியுமா?

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (10:36 IST)
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

 
தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து புயலாக மாறலாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், நாகை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments