Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் கொரோனா! இன்று ஒரு லட்சம் தடுப்பூசி முகாம்கள்!

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (08:55 IST)
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில் இன்று பிரம்மாண்ட தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்திருந்தது. இந்நிலையில் சமீப காலமாக கொரோனா பாதிப்புகள் மீண்டும் மெல்ல உயரத் தொடங்கி தற்போது 3 ஆயிரத்தை எட்டியுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பகுதிகளில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் முதல் டோஸ், இரண்டாவது டோஸ் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை 1.45 கோடியாக உள்ளது. சென்னையில் மட்டும் 13,72,219 பேர் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

இதனால் சென்னையில் வார்டுக்கு 17 இடங்களில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இன்றைய முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments