Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 பக்கெட் தண்ணி 10 ரூபாய்... முருகா மக்கள காப்பாத்துப்பா..

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (17:10 IST)
தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. தமிழகம் மழை இல்லாத மாநிலமாக ஆகிவருவதால் காலப்போக்கில் பாலைவனம் ஆகிவிடுமோ என மக்கள் அச்சப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் பழனிமலை முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் சண்முகா நதியில் குளித்துவிட்டு மலைக்கோவிலுக்குச் செல்வது வழக்கமாகும். மேலும் பழனி பகுதியில் உள்ள கோயிகளில் விழாக்கள் நடைபெற்றாலும் கூட சண்முகா நதியில் இருந்துதான் பக்தர்கள் தண்ணீர் எடுத்துச் செல்வார்கள்.
 
ஆனால் தமிழகத்தில் மழையில்லாத காரணத்தால், கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தாலும் தற்போது சண்முகாநதி வறண்டு காணப்படுகிறது.
 
இந்நிலையில் சண்முகா நதியில் குழிதோண்டி அதில் கிடைக்கும் ஊற்று நீரை உறிஞ்சி எடுத்து ஒரு வாளி 10 ரூபாய்க்கு விற்கின்றனர்.
 
கோயில்களின் சார்பில் கழிவறைகள் ஏற்பாடு செய்திருந்தாலும் கூட மக்கள் சண்முக நதி நீரை வாங்கு அதில் குளிப்பதையே புனிதமாகக் கருதுகிறார்கள். எனவே ஒரு வாளி தண்ணீர் 10 ரூபாய்க்கு வாங்க முடிந்த பக்தர்கள் வாங்கிக் குளிக்கிறார்கள் . மற்றவர்கள் இவ்விலையைக் கேட்டு மலைத்துப்போகிறார்கள்.
 
 

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments