Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஆரம்பம் ஆகும் எடப்பாடியின் எடுபுடி அத்தியாயம் - ஆவேசமான ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (16:59 IST)
சேலம் எட்டுவழி சாலை திட்டத்திற்கு எதிராக தொடங்கபட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் அந்த திட்டத்தை தொடரக்கூடாது என்று உத்தரவிட்டது. இந்நிலையில் மத்திய அரசு இந்த வழக்கை மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.


”எட்டுவழிசாலை திட்டத்தை ரத்து செய்த பிறகும் அதை மேல்முறையீடு செய்துவிட்டு மேடையில் நிதின் கட்கரி “சேலம் எட்டுவழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம்” என கூறுகிறார். அதைக்கேட்டு கொண்டே முதல்வர் பழனிசாமியும், ராமதாஸும் மேடையில் உட்கார்ந்திருக்கின்றனர். அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்கள் தோல்வியை பரிசாக அளித்த பிறகும் இவர்கள் இப்படி செய்வது மக்கள் விரோத போக்கையே காட்டுகிறது. எடப்பாடியின் எடுபிடி அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி தொடங்கிவிட்டதன் அறிகுறிதான் இது.

”அனைவரையும் அனைத்து செல்வேன்” என்று சொன்ன மறுநாளே பிரதமர் மோடி இப்படி தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சொந்தம் கொண்டாடிய டாக்டர்.அன்புமணி இப்போது பாஜக-அதிமுக மக்கள் விரோத போக்கை கைக்கட்டி வேடிக்கை பார்க்க போகிறாரா? அல்லது கூட்டணியிலிருந்து பா.ம.க வை விலக்கிக்கொள்ள போகிறாரா? என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கிறார்கள்”

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணியை பற்களால் நாத்தனார்.. உயர்நீதிமன்றம் அளித்த வித்தியாசமான தீர்ப்பு..!

மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. தியாகி பட்டம் தந்த கிராமத்தினர்..!

தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் நாளை அறிவிப்பா? அண்ணாமலை விளக்கம்..!

நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? காவல்துறை விளக்கம்..!

மாதவிடாயால் ஒதுக்கப்பட்ட மாணவி? பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்! - காவல்துறை அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments