Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுடன் இணைந்த புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (12:05 IST)
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் நிலையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் ஆளும், எதிர் கட்சிகள் தேமுதிகவை தம் கூட்டணிக்குள் இழுக்கப் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் ’தன் கெத்தை’ விட்டுக்கொடுக்காத விஜயகாந்த் இன்னும் தொகுதி உடன்பாட்டில் இழுபறியாகவே இருக்கிறார். 
இந்நிலையில் தற்போது ஸ்டாலின் இதற்குமேல் பேரம் நடத்த முடியாது என  தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து அதிமுக தரப்பில் 4 தொகுதிகள் ஒரு ராஜ்ய சபா சீட்டுத் தந்து தங்கள் மெகா கூட்டணிக்கு மற்றொரு பலமாக தேமுதிகவை இணைக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது தேமுதிக - அதிமுக இடையேயான கூட்டணி உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது புதியதமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியை அதிமுக ஒதுக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் தற்போது அதிமுகவுடனான கூட்டணி ஒப்பந்தத்தில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை ராயபேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இதற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி , அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் ஓப்பந்தத்தில் கையெழுதிட்டனர். மேலும் வரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதரவளிப்பதாகவும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் பன்னீர் செல்வம் கூறும் போது, புதிய தமிகம் கட்சி தனிக்கட்சி கேட்டு போட்டியிடும் என்றார்.

இதுகுறித்த பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர்  தேர்தலில் போட்டியிடும் சின்னம் குறித்து கவலையில்லை. காரணம் புதிய தமிழகத்துக்குப் பின்னால் அதிமுக இருக்கிறது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments