Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (19:49 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 1,668 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 25,97,603 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,668 பேர்களில் 185 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 24 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 34,663 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 1,887 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 25,43,319 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,63,177 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 405,91,577 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
 
 
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதாம் உசேன் கதிதான் உங்களுக்கும்.. கரெக்ட்டா இருந்துகோங்க! - அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக ஆவணங்கள் போதுமானதாக இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

கொடிக்கம்பங்களுக்கு மாத வாடகை.. அரசியல் கூட்டங்களுக்கு கட்டணம்.. நீதிமன்றம் அதிரடி..!

திருமாவளவன் - வைகை செல்வன் திடீர் சந்திப்பு.. அதிமுக கூட்டணிக்கு செல்கிறதா விசிக?

ஜூன், ஜூலை தான் கோடை காலமா? படிப்படியாக வெப்பம் உயரும் என வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments