Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (19:44 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 1,061 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 26,99,554 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,061 பேர்களில் 135 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 12 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 36,072 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 1,286 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 26,51,431 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,22,835 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 507,88,402 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

மகனுக்கு பார்த்த பெண்ணுடன் காதல்.. மாமனாருடன் ஓடிய மருமகள்!

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments