Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெல்லை கல்குவாரி விபத்து: நிவாரண நிதியை அறிவித்தார் முதல்வர்!

Advertiesment
stalin
, ஞாயிறு, 15 மே 2022 (13:38 IST)
நெல்லையில் நிகழ்ந்த கல்குவாரி விபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரண உதவியை அறிவித்துள்ளார் 
 
நேற்று நெல்லை கல்குவாரியில் இருந்து பாறைகள் திடீரென சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் 300 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதில் 3 பேர் பலியாகியுள்ளதாகவும் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மேலும் கல்குவாரியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராட்சத எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதியை அறிவித்துள்ளார். மேலும் மீட்பு பணிகளுக்கு உதவ தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் அரக்கோணத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவசகாயம்: வத்திக்கான் தேவாலய விழாவில் ஒலித்த 'தமிழ்த்தாய் வாழ்த்து'