வசந்தம் மலரட்டும்- முதல்வர் ஜெயலலிதா சித்திரை திருநாள் வாழ்த்து
, ஞாயிறு, 14 ஏப்ரல் 2013 (10:18 IST)
இனிய புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும். வளம் பெருகட்டும். அன்பு நிலவட்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகத் தமிழர்களின் ஒருமித்த உணர்வின்படியும், உளப்பூர்வ விருப்பத்தின்படியும் சித்திரை முதல் நாள் மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக உறுதி செய்ததை எனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகக் கருதுகிறேன். தமிழக மக்கள் தொடர்ந்து சித்திரை முதல் நாளில் உவகை நிறைந்த உள்ளத்தோடு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த இனிய புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும். வளம் பெருகட்டும். அன்பு நிலவட்டும் என முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். விஷு புத்தாண்டு: மலையாளப் புத்தாண்டான விஷு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட செய்தி:மலையாள மொழி பேசும் மக்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் தங்களது பாரம்பரியப் பண்புகளை விடாது பேணிப் பின்பற்றி வருகின்றனர். விஷு பண்டிகையன்று அதிகாலையில் அரிசி, காய், கனி வகைகள், கண்ணாடி, கொன்றை மலர், தங்க நாணயங்கள் ஆகியவற்றைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட விஷுக்கனியை கண்டு, வரும் ஆண்டு குறைவற்ற செல்வத்தையும், அளவற்ற மகிழ்ச்சியையும், நோயற்ற வாழ்வையும் வழங்க வேண்டும் என வேண்டி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இப்புத்தாண்டைக் கொண்டாடும் அனைவரின் மனங்களிலும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கட்டும் என்று தமிழக முதல்வர் தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில்ன் குறிப்பிட்டுள்ளார்.