Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வகு‌ப்பறை‌யி‌ல் செ‌ல்போ‌னி‌ல் 'ஜொ‌ல்' - மாணவ - மாணவிகளு‌க்கு த‌மிழக அரசு 'செ‌க்'

Advertiesment
பள்ளி
, வியாழன், 26 ஜூலை 2012 (11:47 IST)
பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு செல்ல தடை வி‌தி‌த்து‌ள்த‌மிழப‌ள்‌ளி‌க்க‌ல்‌வி‌த்துறை, தடையை ‌மீ‌றி கொ‌ண்டவரு‌மமாணவ‌ - மாண‌விக‌ள் ‌மீதகடு‌மநடவ‌டி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது. ப்பட்டுள்ளது.

பள்ளிக்கூடங்களுக்கு மாணவ - மாண‌விக‌ளசெல்போன்களை கொண்டு செல்வதும், வகுப்பறையில் இரு‌ந்தபேசுவதும், எ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ். அனு‌ப்பவுது‌ம், பள்ளிக்குப்போகும்போதும் வீட்டுக்கு வரும்போதும் அதே கவனத்தில் இருப்பதும் அவ‌ர்க‌ளி‌னபடி‌ப்பை ‌‌சிதறடி‌க்‌கிறது. இததொட‌ர்பாபுகா‌ரபள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் செல்போன்களை பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கவேண்டும் என்றும் பெற்றோர்களும் பள்ளியில் படிக்கும் மகனுக்கோ மகளுக்கோ செல்போன் வாங்கிக் கொடுக்கக்கூடாது. அவ்வாறு கொடுத்தாலும் அதை பள்ளிக்கு கொண்டு செல்ல பெற்றோர் அனுமதிக்கக்கூடாது என்று அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பும்படி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ப.மணி, தொடக்ககல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அறிக்கை அனுப்புகிறார்கள்.

ப‌ள்‌ளி‌‌க்க‌ல்‌வி‌த்துறஇயக்குனர் ப.மணி கூறுகை‌யி‌ல், ஏற்கனவே மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்போன்களை கொண்டுவரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம். இப்போது அதை மீண்டும் நினைவு படுத்த உள்ளோம். செல்போனை எந்த காரணம் கொண்டும் பள்ளிக்கூட வளாகத்திற்கு கொண்டு செல்லக்கூடாது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் செல்போன் வைத்திருக்கிறானா. அதை எவ்வாறு பயன்படுத்துகிறான் என்று கவனிக்கவேண்டும். எது எப்படியோ செல்போன்களை அவர்கள் பள்ளிக்கு கொண்டு செல்லக்கூடாது என்று கண்டிப்பாக பெற்றோர்கள் மாணவர்களிடம் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

எனவே இனிமேல் எந்த ஒரு பள்ளிக்கூட மாணவரோ அல்லது மாணவியோ பள்ளிக்கு செல்போன்கொண்டு சென்றால் மாணவர்களின் புத்தகப் பையை ஆசிரியர்கள் சோதனை போடுவார்கள். செல்போன் இருப்பது கண்டுபிடித்தால் அந்த மாணவர்கள் எச்சரிக்கப்படுவார்கள். அடுத்த நாள் பள்ளிக்கு செல்லும்போது பெற்றோருடன் பள்ளிக்கு செல்லவேண்டும் என்று ம‌‌ணி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil