Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டவகுப்புகள் தொடக்க விழா

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Advertiesment
பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி
, சனி, 6 ஆகஸ்ட் 2011 (15:10 IST)
பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டவகுப்புகள் தொடக்கவிழா நடைபெற்றது.

webdunia photo
WD
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அத்தாணி சாலை‌யி‌ல் உ‌ள்ள பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் இந்த ஆ‌ண்டிற்கான முதலாம் ஆண்டு பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வகுப்புகள் தொடக்க விழா கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூ‌‌ரி இயக்குனர் டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன் தலைமை தாங்கினார்.

கவிஞரும், நமது நம்பிக்கை நாளிதழ் ஆசிரியருமான மரபின் மைந்தன் முத்தையா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகை‌யி‌ல், இது ஆடி மாதம். ஆடி பட்டம் தேடி விதை என்பது பழமொழி. உங்கள் குழந்தைகள் என்ற விதைகளை பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி என்ற நஞ்சை நிலத்தில் விதைத்துள்ளீர்கள். இது வீரியத்துடன் முளைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மாணவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி பெற நம்பிக்கை அவசியம். இவ்வளவு காலம் வளர்த்து படிக்கவைத்த பெற்றோர் மீது நிரந்தர நம்பிக்கை வேண்டும். கல்வி நிறுவனத்தின் மீது நம்பிக்கை வேண்டும். இவைகள் அனைத்தையும் விட உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை வேண்டும்.

எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபடவேண்டும். பழைய தோல்விகள் நம்மை பாதிக்ககூடாது. குழந்தைகளை பெற்றோர்கள் ஊக்குவிக்கவேண்டும். முதல் பருவம் முடிந்தவுடன் உங்கள் ஆசிரியரிடம் சென்று நான் எதிர்காலத்தில் என்ன ஆகலாம் என்று கேட்டால் உங்களை பற்றி அவர்கள் சரியாக சொல்லிவிடுவார்கள்.

ஆசிரியருக்கு அவ்வளவு திறமை உண்டு. இந்தியாவில் மட்டுமே ஒரு ஆசிரியர் குடியரசு‌த் தலைவ‌ர் ஆகமுடியும் ஒரு குடியரசு‌த் தலைவ‌ர் ஆசிரியராக முடியும். மாணவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் சரியாக எடைபோடும் காலதராசுதான் ஆசிரியர்கள் எ‌ன்றா‌ர்.

முன்னதாக க‌ல்லூ‌ரி முதல்வர் முனைவர் ஏ.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். கல்லூ‌ரி தலைமை செயல் அலுவலர் முனைவர் ஏ.எம்.நடராஜன் துறை தலைவர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். விழாவில் கல்லூ‌ரி‌யி‌ல் நான்காம் ஆண்டு மாணவர் சி.எஸ்.சந்துரு, மாணவி பி.ஷர்மிளா ஆகியோர் கல்லூரியின் வசதிகளை குறித்து முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைத்தனர். இறுதியில் மாணவி திவானிலா நன்றி கூறினார்.

விழாவில் சிறப்பு விருந்தினருக்கு கல்லூ‌ரி இயக்குனர் டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன் பொன்னாடை போத்தி நினைவு பரிசு வழங்கினார். விழாவில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையின் துணை தலைவர் ஈ.மணிவேல், பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் பள்ளியின் மக்கள் தொடர்பு அதிகாரி ஏ.என். குழந்தைசாமி, ஒய்வுபெற்ற மாவட்ட கல்வி அதிகாரி காளியண்ணன் உட்பட பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil