Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன் காலமானார்

Advertiesment
நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன்
, ஞாயிறு, 16 செப்டம்பர் 2012 (11:43 IST)
FILE
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன் இன்று காலமானார். அவருக்கு வயது 84.

கடந்த சில காலமாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் லூஸ் மோகன். இந்நிலையில், இன்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவர் உயிர் பிரிந்துள்ளது.

மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் லூஸ் மோகன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

பிரபல நடிகர்கள் ரஜினி, கமல் முதற்கொண்டு தற்போதைய நடிகர்கள் வரை நடித்துள்ள லூஸ் மோகன், 1,000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தமிழை திரையில் பிரபலப்படுத்திய லூஸ் மோகன், விட்டு விட்டுப் பேசி காமெடி செய்யும் விதம் தனி விதமானது என்றால் மிகையாகாது.

Share this Story:

Follow Webdunia tamil