ஜாதி வாரி கணக்கெடுப்பில் பார்க்கவ குலம் என தெரிவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் பார்க்கவ குல முன்னேற்றச் சங்கத்தின் மாநில பொருளாளர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பார்க்கவகுல உடையார் சமுதாயத்தில் நத்தமர் உடையார், மலையமான் உடையார், நயினார் பெருமக்கள், மூப்பனார், சுருதிமார் உடையார் என 5 பிரிவுகள் உள்ளன.
இவ்வனைத்துப் பிரிவு சமுதாயப் பெருமக்கள் அனைவரும் தற்போது நடைபெற்று வரும் ஜாதி வாரி கணக்கெடுப்பில் பார்க்கவ குலம் என்று பொதுப் பெயரை குறிப்பிட வேண்டும்.
உட்பிரிவில் பார்க்கவகுல உடையார், நயினார், மூப்பனார் என குறிப்பிடலாம் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.