Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் 50 அடைமொழி ரவுடிகளுக்கு போலீஸ் குறி!

Advertiesment
சென்னை போலீஸ்
, புதன், 3 ஜூலை 2013 (16:58 IST)
FILE
குஜராத் மோடி பாணியை கடைபிடிக்கும் தமிழக அரசு சென்னையில் அடைமொழியுடன் திரிந்து வெட்டுக் குத்து, அடியாட்கள் வேலை பார்க்கும் 50 ரவுடிகளுக்கு சென்னை மாநகரக் காவல்துறை மூலம் குறி வைத்துள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் “போக்கிரிகள் கண்காணிப்பு பிரிவு” கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் புது உத்வேகத்துடன் தற்போது இயங்கி வருகிறது.

வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, மேற்கு சென்னை ஆகிய 4 மண்டலங்களிலும் ரவுடிகளை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போலீசார் ரவுடிகளை அடையாளம் காண அடைமொழிகளை அவர்கள் பெயர்களுடன் சேர்க்கின்ற்னார். ரவுடிகள் தாங்களே இந்தப் பெயர்களை வைத்துக் கொள்வதில்லை. போலீஸ்-ரவுடி நெட்வொர்க் நட்புடன் செயல்படும்போது அவர்களுக்கு செல்லமாக வைக்கப்பட்ட அடைமொழிப் பெயர்கள் இவை என்று கூட நாம் கூறலாம்.

சென்னையில் கடந்த வாரம் 7 நாட்களில் 52 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

போலீசுக்கு பயந்து 8 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். கட்டை ராஜா, காக்கா தோப்பு பாலாஜி, வைரம் என்ற வைர மூர்த்தி, வடகரை சக்திவேல், குட்டி பாஸ்கர், அப்பு என்ற கிருஷ்ணசாமி, சரவணன், தம்பிராஜா, நெல்லையை சேர்ந்த தாத்தா செந்தில், காஞ்சீபுரம் ஸ்ரீதர் உள்ளிட்ட சுமார் 50 ரவுடிகள் போலீசாரின் தேடுதல் வேட்டை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரையும்....

கைது செய்ய போலீசார் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கே.கே.நகரை சேர்ந்த கரிமேடு அன்பு என்ற ரவுடி போலீசில் சிக்கினார். இவர் சென்னையை கலக்கிய பிரபல தாதா சேராவின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் போலீசார் புதிய முயற்சி ஒன்றையும் எடுத்து வருகிறார்களாம். பயங்கர ரவுடிகளை லிஸ்ட் போட்டு அவர்களை வெளிமாநிலங்களுக்கு விரட்டும் திட்டம் உள்ளதாம்! ரொம்ப நல்லாயிருக்கே! பேஷ்! அண்டை மாநிலங்களில் போய் ரவுடியாக இரு! இங்கு போதும் நிப்பாட்டு! குட் பாலிசி! குட் டமில் நாடு போலீஸ்!

Share this Story:

Follow Webdunia tamil