Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவீன ஒலிம்பிக்கின் துவக்கம்!

Advertiesment
நவீன ஒலிம்பிக் Olympic 2008 Beijing
1500 ஆண்டுகளுக்குப் பிறகு, 1896ம் ஆண்டு பழைய நாட்காட்டியின்படி, மார்ச் 26-ந் தேதி (புதிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 6, 1896) அன்று மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் உயிர்த்தெழுந்தது.

webdunia photoWD
கிரேக்க தலைநகரில் முப்பெரும் விழாவாக மீண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. கிரேக்கத்தின் விளையாட்டு, தேசம், மதம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விழாவாக நடந்த அந்த விழாவின் முடிவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன.

13 நாடுகளைச் சேர்ந்த 300 தடகள வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். ஓட்டம், குதித்தல், தாண்டுதல், நீண்ட தூர மராத்தன், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக், துப்பாக்கி சுடுதல், பளு தூக்குதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

மராத்தனை வென்ற ஸ்பைரோஸ்!

கிரேக்க நாட்டு வீரர்கள் 10 தங்கப் பதக்கங்களை வென்றனர். அந்நாட்டின் சற்றும் அறிமுகமில்லாத, பயிற்சி பெறாத ஸ்பைரோஸ் லூயிஸ் என்கின்ற வீரர் புகழ்பெற்ற மராத்தன் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று கிரேக்க மக்களாலும், உலகத்தாலும் போற்றப்பட்டார்.

ஏதென்ஸ் நகரில் உள்ள மராத்தோனாஸ் என்ற இடத்தில் உள்ள மராத்தோன் விளையாட்டு அரங்கில் இருந்து அந்த நீண்ட தூர ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டதால், அந்தப் பந்தயத்திற்கு மராத்தன் ஓட்டம் என்ற பெயர் ஏற்பட்டது.

அன்று மராத்தோனாஸ் நகரில் இருந்து ஓடத்துவங்கிய வீரர்கள், வெற்றிக் கம்பத்தை தொடுவதற்கு ஓடிய 26 மைல்கள் 396 கஜ தூரமே மராத்தன் ஓட்டப்பந்தயத்திற்கான தூரமாக இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது.

28வது ஓலிம்பிக் போட்டிகள்!

1896ல் துவங்கி நவீன ஒலிம்பிக் போட்டிகள் இன்று வரை எவ்வித தடையும் இன்றி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு 29வது முறையாக ‌பீ‌ஜி‌ங் நக‌ரி‌ல் துவ‌ங்‌கியு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil