Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (14:54 IST)
ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...


உழைப்பை மூலதனமாக கொண்ட நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் எந்த பிரச்சனைகளையும் சமாளிக்க ஆக்கப்பூர்வமான யோசனைகள்  தோன்றும். எண்ணம் - புத்தி - செயலில் இருந்த மந்த நிலை மாறும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறையான எண்ணங்கள் உருவாகும்.

தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு கூடுதல் பணிச்சுமையால் உடற் சோர்வு ஏற்படலாம். மேலிடத்திடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: வாராகி தேவியை அர்ச்சனை செய்து வணங்கினால்  எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள்  அகலும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments