Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (30-07-2019)!

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (30-07-2019)!
, செவ்வாய், 30 ஜூலை 2019 (05:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்
இன்று நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகளும் பெருகிடவும் வாய்ப்பான நாளிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெள்ளை

ரிஷபம்
இன்று  தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் நாளிது. சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

மிதுனம்
இன்று வேலை மாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனுகூலமாகும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி மாற்றம் உண்டு. வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரச அனுகூலம் உண்டு. வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பிரவுண்

கடகம்
இன்று சக ஊழியர்களுடன் ஒத்துப் போவீர்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபடவும் நாளிது. உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும். வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், நீலம்

சிம்மம்
இன்று பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை, மஞ்சள்

கன்னி
இன்று புத்துணர்ச்சியுடன் எதையும் எதிர் கொள்வீர். நல்ல உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் இருக்கும்.   நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், சிவப்பு

துலாம்
இன்று உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

விருச்சிகம்
இன்று தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமிபிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் செயல்பாட்டினால் உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். பாக்கியஸ்தானத்தில் குரு இருப்பதால் நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

தனுசு
இன்று குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. பணவரவில் ஓட்டம் இருக்கும். ஆனால் அதை உரியதாக செலவழிப்பதில்தான் உங்கள் திறமை இருக்கிறது.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

மகரம்
இன்று இரக்கப்பட்டு செய்த உதவி கூட ஏன் செய்தோம் என்று எண்ண வைக்கும். சுபகாரிய விஷயங்கள் தொய்வு இல்லாமல் நடக்கும். வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான நாளிது.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

கும்பம்
இன்று மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமான அணுகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

மீனம்
இன்று  தொழில்துறையாளர்களுக்கு நன்றாக இருக்கும். ஊழியர்கள் அமைதியாகப் போவார்கள். பேங்க் பணப் பரிமாற்ற முறையில் தங்குதடையின்றி நடைபெறும்.வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பிரவுண்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதோஷ காலத்தில் சிவாலய வழிபாட்டின் பலன்கள்..!!