Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - மு.க.அழகிரி

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - மு.க.அழகிரி
, புதன், 26 மார்ச் 2014 (11:04 IST)
திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
 
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்ட மு.க.அழகிரி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைவர் கலைஞர் நேற்று அறிவித்தார். 
 
இந்நிலையில், இன்று சென்னை வந்த மு.க.அழகிரி விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது, திமுகவில் இருந்து என்னை நீக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டேன். 2 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார். மேலும், பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்

Share this Story:

Follow Webdunia tamil