நாட்டில் மோடி அலை வீசுகிறது, சுனாமி சூரைக்காற்று என்பதெல்லாம் பொய் மோடி புழுதிக்காற்று தான் வீசுகிறது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
உலக அரங்கில் அங்கீகாரம் பெற கம்யூனிஸ்ட் கட்சிகளை நம்ப வைத்து துரோகம் செய்த ஜெயலலிதா, காங்கிரஸ் கட்சியை நாட்டைவிட்டு துரத்த வேண்டும் என தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருகிறார். நாகரீகமான முறையில் விமர்சனம் செய்ய அவர் கற்றுக்கொள்ள வெண்டும் என்று கூறினார். மேலும் நான் திருப்பூர் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி மேலிடத்தில் அனுமதி கேட்டுள்ளேன்.
ஏற்கனவே கோபி தொகுதியில் நிறைய நலத்திட்டங்கள் செய்துள்ளோம். திருப்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய வரும்படி சோனியாகாந்திக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளேன். வாசன் போன்ற மிகப்பெரிய தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் ஒரே தொகுதியில் முடங்கும் நிலை ஏற்படும். அதை தவிர்த்து 39 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யவே அவர்கள் போட்டியில் இருந்து விலகுகிறார்கள்.
கடந்த 2004, 2009ம் ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தலின் போது வெளியான கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது அதேபோல இந்த முறையும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். நாட்டில் மோடி அலை வீசுகிறது, சுனாமி சூரைக்காறு என்பதெல்லாம் பொய் மோடி புழுதிக்காற்று தான் வீசுகிறது என இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.