அற்புதம்மாள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்
, புதன், 19 பிப்ரவரி 2014 (19:26 IST)
7
பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு பேரறிவாளன் தாயார் முதல்வரை சந்தித்து நன்றி கூறினார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன், பேரறிவாளன் ,முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்து ஆயுள்தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் இவர்களின் விடுதலை குறித்து மாநில அரசுக்கு முழுஅதிகாரம் அளித்தும் உத்தரவிட்டது. இந்நிலையில் இவர்கள் மூவரையும் விடுதலை செய்ய முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டார். மேலும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள 7 பேரின் உறவினர்களும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 7 பேரின் விடுதலையால் மிகவும் சந்தோஷமடைந்துள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், இவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார்.