Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீனவர்கள் விவகாரம்; ஜெ பிரதமருக்கு கடிதம்

மீனவர்கள் விவகாரம்; ஜெ பிரதமருக்கு கடிதம்
, வியாழன், 29 ஆகஸ்ட் 2013 (12:03 IST)
FILE
இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வியாழக்கிழமை முதல்வர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 26ம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்ற பாம்பன் பகுதி மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள மற்றொரு சம்பவத்தை இங்கு உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

ஏற்கனவே 36 நாகப்பட்டினம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டு, பல வாரங்களாக அவர்கள் சிறையில் வாடி வருகின்றனர்.

மேலும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 41 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை உடனடியாக விடுவிக்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மௌன நிலையையே கடைபிடித்து வருகிறது.

இந்த சம்பவங்களால், தமிழக மீனவர்களின் வாழ்வுரிமை பாதிக்கப்பட்டு, அவர்கள் சொல்லொணாத் துயரத்தில் உள்ளனர். கைது செய்யப்படும் மீனவர்கள் மட்டும் அல்லாமல், அவர்களது குடும்பத்தினர் வறுமையிலும், உறவுகளை பிரிந்தும் வாடுகின்றனர்.

2011ஆம் ஆண்டு ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் மீது பல்வேறு வழக்குகள் போட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, ஏற்கனவே பல்வேறு சமயங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் 82 மீனவர்களையும், கடந்த 26ம் தேதி கைதான 35 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil