Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளவரசன் உடல் மறுபிரேதப் பரிசோதனை

இளவரசன் உடல் மறுபிரேதப் பரிசோதனை
, திங்கள், 8 ஜூலை 2013 (15:47 IST)
FILE
மரணமடைந்த இளவரசன் தரப்பை சேர்ந்த வக்கீல்கள் சில குறிப்பிட்ட மருத்துவர்களின் பெயரை பரிந்துரை செய்து அவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

தர்மபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் கடந்த 4 ஆம் தேதி ரெயில் தண்டவாளத்தின் அருகில் மூளை சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து 5 ஆம் தேதி காலை 5 பேர் கொண்ட குழுவினர் இளவரசனின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இளவரசன் தரப்பை சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

அதை விசாரித்து தீர்ப்பு கூறிய நீதிபதிகள் இளவரசனின் பெற்றோர் மறு பிரேத பரிசோதனை செய்ய சொன்னால் செய்வதற்கு தயாராக இளவரசனின் உடலை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்றும், மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ காட்சிகளை அவரது பெற்றோரிடம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனை செய்த அன்று இரவு 9.30 மணிக்கு இளவரசனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் அவரது பெற்றோருக்கும் அந்த நகல் கொடுக்கப்பட்டது. இளவரசனின் பிரேத பரிசோதனையை பார்த்த அவர்களது வக்கீல்கள் பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் குழுவில் 2 பேர் சரியாக செயல்படவில்லை என்று குறிப்பிட்டனர்.

இதையடுத்து அவர்கள் இளவரசனின் பிரேதத்தை மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக அவசர மனு தாக்கல் செய்கிறார்கள். இந்த மனு முக்கியமானது என்பதால் உடனடியாக தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

எனவே இன்றே இளவரசனின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இளவரசன் தரப்பை சேர்ந்த வக்கீல்கள் சில குறிப்பிட்ட மருத்துவர்களின் பெயரை பரிந்துரை செய்து அவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இளவரசன் இறந்து இன்றோடு 5 நாட்கள் ஆகிறது. இதனால் இன்று வரை தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. காவல்துறையினர் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள். இரவு நேரத்தில் கிராம பகுதிகளில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. பின்னர் மீண்டும் காலை நேரத்தில் காவலர்கள் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil