Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பக்தரை வேல்கம்பியால் ஓங்கி அடித்த பூசாரியால் பரபரப்பு

பக்தரை வேல்கம்பியால் ஓங்கி அடித்த பூசாரியால் பரபரப்பு
, திங்கள், 15 ஏப்ரல் 2013 (17:39 IST)
பக்தருக்கும் பூசாரிக்கு நடந்த வாக்குவாதம் முற்றி கைகளப்பாக மாறியதன் விளைவாக, கோபத்தில் பூசாரி முருகன் கோவில் வேல்கம்பை எடுத்து பக்தரின் தலையில் ஓங்கி அடித்ததால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகேயுள்ள கோவில் கொல்லை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் ஊரணிபுரம் வழி விடு முருகன் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். பத்துபுள்ளி விடுதி மாரியம்மன் கோவில் மற்றும் சுற்று வட்டார கோவில்களுக்கும் சென்று பூஜை செய்தும் வந்தார்.

கடந்த 5 நாட்களாக அர்ச்சகர் செல்லப்பன் பத்துபுள்ளி விடுதி மாரியம்மன் கோவிலுக்கு ஏதோ பிரச்சினைகாரணமாக பூஜை செய்ய செல்லவில்லை என்று தெரிகிறது.

நேற்று மாலை அர்ச்சகர் செல்லப்பன் ஊரணிபுரம் வழிவிடு முருகன் கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த போது பத்து புள்ளி விடுதியை சேர்ந்த பக்தர் சின்னையன், அர்ச்சகரிடம் ஏன் எங்கள் பகுதி கோவிலுக்கு பூஜை செய்ய வரவில்லை என கேட்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த அர்ச்சகர் செல்லப்பன் வழிவிடு முருகன் கோவிலில் இருந்த வேல் கம்பியை எடுத்து சின்னையனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். அதில் சின்னையனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து திருவோணம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. துணை ஆய்வாளர் செல்வமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முன் விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil