Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
, திங்கள், 15 ஏப்ரல் 2013 (16:51 IST)
FILE
குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக் கோரி கிராம மக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு குறிப்பிட்டிருந்ததாவது, வெம்பகோட்டை ஊராட்சி ஒன்றியம், முத்துச்சாமிபுரம் ஊராட்சியைச் சேர்ந்தது பொட்டல்மடக்கிப்பட்டி கிராமம். இங்கு, 1500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதுவரையில் இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் உள்ளிட்டவைகளை செய்து கொடுக்கவில்லை.

மேலும், அரசு மூலம் அமைக்கப்படும் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டாலும், குடிக்க முடியாத அளவிற்கு உப்பு நீராக இருக்கிறது. இந்த நிலையில் அருகில் உள்ள கிணறுகளிலும் குடிநீர் எடுத்து வந்தாலும், விஷத்தன்மையுடன் இருப்பதால் விஷக்காய்ச்சல், மர்மக் காய்ச்சல் மற்றும் வயிற்றுக் போக்கு போன்ற கொள்ளை நோய்கள் ஏற்படுகிறது.

அதேபோல், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் வாய்க்கால் இல்லாத நிலையிருக்கிறது. இதனால், கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி நோய் பரப்பும் நிலையிருக்கிறது. இதுவரையில், இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்து கொடுக்க முன்வரவி்ல்லை.

எனவே எங்கள் கிராமத்திற்கு தேவையான குடிநீர், கழிவு நீர் வாய்க்கால் உள்ளிட்ட வசதிகளை உடனே செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற மக்களவை தேர்தலை புறக்கணிப்போம் என கிராம பொதுமக்கள் சார்பில் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

கிராம மக்களின் போராட்டம் காவல்துறையினரின் பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டது. மேலும் கிராம மக்களில் 4 பேர் மட்டும் ஆட்சியரைச் சந்தித்து மனுவை கொடுத்தனர். மனு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil