மாணவி பிரேமாவுக்கு கருணாநிதி ரூ.1 லட்சம் பரிசு
, புதன், 23 ஜனவரி 2013 (16:46 IST)
சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் (சிஏ) தேர்வில் முதல் இடம் பிடித்த தமிழ் மாணவிக்கு தி.மு.க சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவிலேயே சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் தேர்வில் முதலிடம் பிடித்த மும்பையைச் சேர்ந்த தமிழ் மாணவி பிரேமாவுக்கு தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.விழுப்புரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் பெருமாள் மும்பையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகள் பிரேமா சிஏ தேர்வில் இந்திய அளவில் முதலிடத்தில் தேர்வாகி சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை பாராட்டி தி.மு.க அறக்கட்டளை சார்பில் பிரேமாவுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.