புறநகர் ரயில், சீசன் டிக்கெட் புதிய கட்டணம் எவ்வளவு
, புதன், 23 ஜனவரி 2013 (16:35 IST)
மத்திய அரசு உயர்த்திய ரயில் கட்டணம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. சென்னை புறநகர் மின்சார ரயில், சீசன் டிக்கெட்டுகளுக்கான புதிய கட்டண விவரத்தை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து கடற்கரை, பல்லாவரத்துக்கு செல்ல 5 ரூபாய். சிறியவர்களுக்கும் 5 ரூபாய்தான்.ஆனால் எழும்பூரில் இருந்து குரோம்பேட்டை, மறைமலைநகருக்கு செல்ல 10 ரூபாய். அப்படியே இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு 5 ரூபாய்.எழும்பூரில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டுக்கு 15 ரூபாய். சிறுவர்களுக்கு 10 ரூபாய்.மேலும், சீசன் டிக்கெட் விலையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி எழும்பூரில் இருந்து கடற்கரை, பல்லாவரம் செல்ல ஒரு மாதத்துக்கு 85 ரூபாய். 3 மாதத்துக்கு 230 ரூபாய்.எழும்பூரில் இருந்து குரோம்பேட்டை, மறைமலைநகர் செல்ல மாதம் 160 ரூபாய். 3 மாதத்திற்கு 435 ரூபாய்.எழும்பூரில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு செல்ல மாதம் 235 ரூபாய். 3 மாதத்திற்கு 635 ரூபாய்.சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் இருந்து வியாசர்பாடி, அன்னனூர், ராயபுரம், கத்திவாக்கம், மந்தவெளிக்கு 5 ரூபாய். சிறியவர்களுக்கும் 5 ரூபாய். சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 10 ரூபாய். சிறியவர்களுக்கு 5 ரூபாய்.இதேபோல் சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் இருந்து வியாசர்பாடி, அன்னனூர், ராயபுரம், கத்திவாக்கம், மந்தவெளி செல்ல மாத சீசன் டிக்கெட் 85 ரூபாய். 3 மாதத்திற்கு 230 ரூபாய்.சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு செல்ல மாத சீசன் டிக்கெட் 180 ரூபாய். 3 மாதத்திற்கு 495 ரூபாய்.ரயில் கட்டணம் உயர்விற்கு முன் ஏற்கனவே சீசன் டிக்கெட் எடுத்தவர்கள் அதற்கான கூடுதல் கட்டணத்தை எதுவும் செலுத்த தேவையில்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.புறநகர் ரயில்களுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசாதான் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறினார். ஆனால், தற்போது, புதிய கட்டண உயர்வுக்கும், அறிவிப்புக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. இதனால் பயணிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.