Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமலிங்கம் மீது மோசடி வழக்கு- வருமான வரித்துறை நடவடிக்கை!

Advertiesment
ராமலிங்கம் மீது மோசடி வழக்கு- வருமான வரித்துறை நடவடிக்கை!
, வெள்ளி, 11 ஜனவரி 2013 (18:40 IST)
FILE
ரூ.27,000 கோடிக்கு அமெரிக்க பத்திரங்களை வைத்திருந்த தாராபுரம் தொழிலதிபர் ராமலிங்கம் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய வருமானவரித்துறை முடிவெடுத்துள்ளது. பத்திரங்கள் அனைத்தும் போலிப்பத்திரங்கள் என்று தெரியவந்துள்ளதையடுத்து இந்த நடவடிக்கை!

தொழிலதிபர் ராமலிங்கம் என்ற இந்த நபர் 2010ஆம் ஆண்டு பரணிதர் ரிபைனரி என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்தார். அதில் அவரது மனைவியையும் பங்குதாரராக சேர்த்துக் கொண்டார்.

தொடக்கத்தில் அந்த கம்பெனிக்காக ரூ.15 லட்சம் முதலீடு செய்தார். தொடங்கப்படாத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூலம் வருவாய் ரூ.19 லட்சம் ஈட்டியதாக கணக்குக் காட்டியுள்ளார் ராமலிங்கம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ரூ.27,000 கோடிக்கான அமெரிக்க கருவூல பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தப் பத்திரங்களை அவர் பிரேசில் நாட்டில் வாங்கியதாக தெரிவித்திருந்தார். இது போலியென்று சந்தேகம் எழவே பத்திரங்களை அதிகாரிகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க வங்கிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பார்க்ளேஸ் வங்கி அந்தப் பத்திரங்கள் போலியானவை என்று கூறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் எழ்த்து பூர்வமாக போலி என்று வங்கி தரவுள்ளதாகவும் தெரிகிறது.

அந்த உத்திரவாதம் வரும் வரை விசாரணை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பத்திரங்கள் உண்மையானவை என்று ராமலிங்கம் தொடருந்து பேட்டியளித்துவருவது குறிப்பிஅத்தக்கது.

மேலும் சீனாவிலிருந்து தங்கப்பத்திரங்களை வாங்கியுள்ளதாகவும் இதனை வைத்துதான் அமெரிக்க பத்திரங்களை பரிமாற்றம் செய்துள்ளதாகவும் வருமானவரித்துறையினர் கருதுகின்றனர். ஆனால் இந்தத் தங்கப்பத்திரங்களும் போலியானவையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.

இதற்கிடையே ராமலிங்கத்திற்குச் சொந்தமான பரணிதர் நிறுவனத்திடமிருந்து சுமார் 2 கோடியைக் கடனாகப் பெற்றதாக வரவு செலவுக் கணக்கில் காண்பித்துள்ளது.

எனவே மிகப்பெரிய மோசடித்திட்டத்தை தீட்டியுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஆனால் எல்லாம் சட்டப்படியே செய்துள்ளேன் என்று ராமலிங்கம் தொடர்ந்து கூறிவருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil