பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு அடுத்த மாதம் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில், மாணவர் சேர்கைக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடைபெற்று வருகிறது.
மாற்றுத் திறனாளி மற்றும் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஏற்கனவே நிறைவடைந்து விட்டது.தொழிற்பிரிவுக்கான முதற்கட்ட கலந்தாய்வும் முடிந்துள்ளது.
இந்நிலையில், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேருக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
200 முதல் 199 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் முதல் நாள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்தாய்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கலந்தாய்வு மற்றும் காலியிட விவரங்களை அறிந்து கொள்வதற்காக 6 பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.