Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோர்ட் தீர்ப்பு: அரசுக்கு விழுந்த சாட்டையடி- கருணாநிதி

Advertiesment
கோர்ட் தீர்ப்பு: அரசுக்கு விழுந்த சாட்டையடி- கருணாநிதி
, திங்கள், 2 ஜூலை 2012 (20:52 IST)
FILE
அண்ணா நூலகக் கட்டிடத்தில் திருமணம் நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அதனை முன்னாள் முதல்வர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்ற தடை விதித்தனர்.

இந்நிலையில் இன்று மூத்த வக்கீல் டி.வில்சன் ஐகோர்ட்டில் ஆஜராகி, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்ததாக ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகி இருப்பதாக முறையிட்டார். அந்த புகாரை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், 'இனிமேல் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது.

நடந்த சம்பவம் குறித்து அரசு மனுதாக்கல் செய்ய வேண்டும் அதன்மீது நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்' என உத்தரவிட்டார். ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை தி.மு.க தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.

இதுபற்றி பேசிய அவர், 'நான் திறந்து வைத்த ஒரே காரணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்ற அ.தி.மு.க அரசு உத்தரவிட்டது. அதற்கு கோர்ட்டு தடை விதித்த நிலையில், நூலகத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியளித்த தமிழக அரசுக்கு இன்றைய தீர்ப்பு ஒரு சாட்டையடி ஆகும். இவ்விவகாரத்தில் ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்’ என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil