''கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் பிரிவு உற்பத்திக்கு தயாராக உள்ளது'' என்று இந்தியாவுக்கான ரஷ்யா தூதர் அலெக்சாண்டர் கடாக்கின் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர் கூறினார்.
முதல் பிரிவு மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றார் அலெக்சாண்டர்.
கூடங்குளம் 2வது மின் உற்பத்தி பிரிவை 6 மாதத்தில் இயக்க முடியும் என்றும் அலெக்சாண்டர் தெரிவித்தார்.
3, 4வது உற்பத்தி பிரிவுகளை அமைப்பது இந்தியாவின் முடிவைப் பொருத்தது என்று அவர் கூறினார்.