சசிகலாவின் உறவினர் ராவணன், மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வருவதால், அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
நடவடிக்கை எடுக்க முக்கிய ஆவணங்களை திரட்டி வரும் காவல்துறையினர், முறைப்படி கோவை மாவட்ட கலெக்டருக்கு தகவல்களை அனுப்பி விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில் ராவணனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுவிட்டது. அவரது துப்பாக்கி லைசென்சை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.