பரமக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு விசாரணையை ஜூலை மாதத்துக்கு உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் தொடர்ந்த வழக்கில், பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
மேலும், பரமக்குடியில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியது நியாயம்தானே என்று மனுவில் கூறியுள்ள அவர், துப்பாக்கி சூடு மனித உரிமை மீறிய செயல் என்றும் துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி கோதா, கோகலே ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆந்திராவில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கோடு சேர்த்து விசாரிப்பதாக கூறிய நீதிபதிகள், இரண்டு வழக்குகளையும் ஜூலை மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.