ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்போவதாக பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தடாலடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.
பா.ம.க.வில் உள்ள பெரும்பாலானோர் தமக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் வேல்முருகன் கூறினார்.
எந்த நோக்கத்துக்காக கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அதிலிருந்து பா.ம.க. விலகி சென்றுவிட்டதாகவும் அவர் குற்றம்சாற்றினார்.
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தாமே தட்டிக் கேட்டதாகவும் வேல்முருகன் தெரிவித்தார்.