கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில், கூடங்குளம் அணுஉலை பற்றி பொதுமக்களிடம் மீண்டும் கருத்து கேட்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு உயர் நீதிமன்றம், இது தொடர்பாக 3 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.